நடிகர் விஜய்-யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ். ஏ. சந்திரசேகர் இமயமலையில் சுற்றுலா சென்றுள்ளார்.

ரஜினிகாந்த், விஜயகாந்த், பாக்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை இயக்கிய எஸ்.ஏ.சி. ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் தனது மகன் விஜய்-யை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.

சமீபத்தில் மனைவி ஷோபா சந்திரசேகருடன் திருக்கடையூர் சென்று தனது 80 வயதைக் கொண்டாடினார் இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர்.

இவர் நேற்று இமயமலையில் சுற்றுலா செல்லும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ராயல் என்பீல்ட் புல்லட் மீது சாய்ந்து கொண்டு எஸ்.ஏ.சி. போஸ் கொடுக்கும் இந்த புகைப்படம் சமீபத்தில் இமயமலையில் பைக் சவாரி சென்று வந்த நடிகர் அஜித்-துக்கு டப் கொடுப்பது போல் உள்ளது என்று அவரது ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.