
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியான படம் மாஸ்டர்.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது. உலகமெங்கும் ரிலீஸாகியுள்ள இந்த படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.
இதனிடையே மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக 25 நாட்களை இன்று தியேட்டரில் நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் இன்று விஜய் தனது ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளார்.
சென்னையில் அமைந்துள்ள அவரது பணையூர் அலுவலகத்திற்கு இன்று அவர் வந்துள்ளார். ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே, செம ஸ்டைலிஷ் லுக்கில் கார் விஜய் செல்லும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Patrikai.com official YouTube Channel