சென்னை: கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகஅரசின் பொதுநிவாரண நிதிக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும், கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை ஏற்று தொழில்நிறுவனங்கள், தொழில்வ அதிபர்கள், திரையுலகினர் , பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும், முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.25 லட்சம் வழங்கி உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நிதியுதவியை வழங்கினார் விஜய் சேதுபதி.
Patrikai.com official YouTube Channel