அரசியல் கட்சி பதிவு செய்து, எஸ்.ஏ.சந்திரசேகர் நியமித்த அனைத்து நிர்வாகிகளையும் நீக்கிவிட்டு, தமிழகம் உட்பட அனைத்து இடங்களிலும் புதிய நிர்வாகிகளை விஜய்நியமித்துள்ளார்.
தமிழகம்மட்டுமின்றி, புதுச்சேரி, ஆந்திரா, டெல்லி, மகாராஷ்டிரா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பகுதிகளிலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கும் பணியை விஜய் தற்போது முடித்துள்ளார்.
இந்த சூழலில், வரும் தீபாவளிஅன்று தனது ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ‘டீஸர்’ அறிவிப்பை முடித்து, நல்லபடியாக படத்தை வெளியிடும் வேலைகள் நடக்க வேண்டும். அதன்பிறகே அரசியல் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடுவது என்பதில் விஜய் தெளிவாக உள்ளார்.