நடிகர் வடிவேலுவின் காமெடிக்கு சிரிக்காதவர்களே இருக்க முடியாது அப்படிப்பட்ட இவர் திடிரென நடிப்பதை கைவிட்டார். இதனால் இவரின் ரசிகர்கள் பெரும் கவலையில் இருந்தார்கள் அந்த கவலையை போக்க இப்போது மீண்டும் கத்திச்சண்டை படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இதனிடையில் வடிவேலுவின் கம்பேக் சென்ற ஆண்டே ரஜினியின் லிங்கா படத்தில் இருக்க வேண்டியது ஆனால் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
அட ரஜினி படத்தில் நடிக்க மறுத்தாரா வடிவேலு அப்படின்னு இந்த விஷயத்தை விசாரிச்சா லிங்கா திரைப்படத்தில் இரண்டாம் பாதியில் வடிவேலு வந்து செல்வது போல காட்சிகள் இருந்ததாம் ஆனால் வடிவேலு நடித்தால் முழு படத்தில் தான் நடிப்பேன் சும்மா வந்து போக மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.
ரஜினி, வடிவேலு காமினேஷனில் சந்திரமுகி திரைப்படம் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
ஹிம்ம்ம்ம்ம்.. இது எந்த அளவுக்கு உண்மையின்னு தெரியலையே…