சென்னை: கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது; நன்றாக குணமடைந்து வருகிறார், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டு உள்ளது.
காமெடி நடிகர் வடிவேலு, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து,அவர் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மேலும் அவருக்கு ஒமிக்ரான தொற்றின் தாக்கம் உள்ளதா என்பததை உறுதி செய்ய அவரது மாதிரிகள் ஓமிக்ரான் பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் அவருக்கு ஒமிக்ரான பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த வடிவேலு உடல்நிலை சீராக உள்ளது; நன்றாக குணமடைந்து வருகிறார், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என போரூர் ராமச்சந்திரா மருத்துவனை நிர்வாகம் இன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.