‘கருப்பன் குசும்புக்காரன்’ என்ற ஒற்றை வசனத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் தவசி.
இவர் பாரதிராஜாவின், ‘கிழக்குச் சீமையிலே’ படத்திலிருந்து தனது சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார்.
கிடா மீசையில் பல படங்களில் அனைவரையும் மிரட்டி வந்த தவசி தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமாக ஆள் அடையாளம் தெரியாத அளவு மாறியுள்ளார்.
சிகிச்சைக்காக உதவி நாடியுள்ளார் நடிகர் தவசி. மேலும் தவசியின் மகன் சமூக வலைதளத்தில் பண உதவி கேட்டு வேண்டுகோள் வைத்துள்ளார்.