சென்னை:
மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நடிகர் சூர்யா அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்வு, உயிரை விட பெரியது அல்ல என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், எந்த ஒரு கவலையானாலும் சில காலத்துக்குப் பிறகு குறைந்துவிடும் என்றும், மனதில் கஷ்டம் இருந்தால் பிடித்தவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை தைரியத்துடன் இருந்தால் வெற்றி நிச்சயம் என்றும் அவர் கூறியுள்ளார்.