கேரள மாநிலத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

கேரளாவில் பா.ஜ.க.வுக்கு சாதகமாக உள்ள 40 தொகுதிகளை அந்த கட்சியின் மாநில நிர்வாகிகள் தேர்வு செய்துள்ளனர்.

அந்த தொகுதிகளின் பெயர் பட்டியலையும், அதில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்ற குறிப்பையும் டெல்லி பா.ஜ.க. மேலிடத்துக்கு கேரள மாநில தலைமை அனுப்பி வைத்துள்ளது.

இந்த உத்தேச வேட்பாளர் பட்டியலில் நடிகர்கள் சுரேஷ் கோபி, கிருஷ்ண குமார் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

கேரள மாநில பா.ஜ.க. தலைவர் கே.சுரேந்திரன், முன்னாள் தலைவர் கும்மனம் ராஜசேகரன் ஆகியோர் பெயரும் இடம் பெற்றுள்ளது.

ஆனால் கேரளா சட்டப்பேரவையில் பா.ஜ.க. உறுப்பினராக முதன் முதலில் நுழைந்த ஓ.ராஜகோபால், பெயர் இடம் பெறவில்லை.

அவர், இப்போது, நெமோம் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
அந்த தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபியை நிறுத்த, மாநில பா.ஜ.க. பரிந்துரைத்துள்ளது.

கடந்த மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட அவர் தோற்றுப்போனார்.

எனினும் அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு பதவியில் இருக்கிறார்.

– பா. பாரதி