திரைப்படத் துறையில் நடிகர் மற்றும் நடிகைகளின் வாரிசுகளும் நடிகர்கள் ஆவது மிக நாட்களாக வழக்கமான ஒன்றாக ஆகி விட்டது.    பல முன்னணி நடிகர்களின் குழந்தைகள் திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.   விஜயின் மகன் வேட்டைக்காரன் படத்தில் தன் தந்தையுடன் தோன்றினார்.   அதே போல விஜய் சேதுபதியின் மகன்,  மீனாவின் மகள், ஜெயம் ரவியின் மகன்  என இந்தப் பட்டியல் தொடர்ந்து வருகிறது.

தற்போது நகைச்சுவை நடிகர் சூரியின் மகன் குழந்தை நட்சத்திரமாக நடிக்க உள்ளார்.   நடிகர் சூரியை அறிமுகப் படுத்திய சுசீந்திரன் அவர் மகன் சர்வானை அறிமுகப்படுத்துகிறார்.     சுசீந்திரனின் இயக்கத்தில் உருவாகும் ஏஞ்சலினா என்னும் படத்தில் சூரியின் மகன் சர்வான் முக்கிய கதா பாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகிறார்,

இயக்குனர் சுசீந்திரன், “நடிகர் சூரியின் மகன் சர்வான் சிறுகுழந்தையில் இருந்தே துறுதுறுப்பாக இருப்பான்.   வேறு யாரும் அவனை நடிக்க வைப்பதற்குள் நாம் முந்திக் கொள்வோம் என எண்ணி நான் ஏஞ்சலினாவில் அவனை நடிக்க வைத்துள்ளேன்.   இந்தப் படத்தில் சூரியும் நடிக்கிறார்.  தனது படிப்பு கெடாத வகையில் சர்வான் தொடர்ந்து நடிக்கலாம் என்பது எனது கருத்து”  எனக் கூறி உள்ளார்.

[youtube-feed feed=1]