
சந்தானம் ஹீரோவாக மாறி இதுவரை ஒரு ஹிட் மட்டும் தான் கொடுத்துள்ளார் அது “தில்லுக்கு துட்டு” படம் தான். சந்தானத்தின் மொத்த தோற்றத்தையும் மாற்றி அவரின் வழக்கமான காமெடி பாணியில் இருந்ததாலும் ஹாரர் சீசன் என்பதனாலும் அந்த படம் ஹிட் அடித்தது.
அதன்பின் இவர் நடித்து முடித்துள்ள திரைப்படம் “சர்வர் சுந்தரம்” நாகேஷ் ஹீரோவாக நடித்து அன்று மெகா சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படத்தை இவர் இந்த காலத்துக்கு ஏற்றார் போல மாற்றி நடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த வருடம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று சந்தானத்தின் அடுத்த படத்துக்கான அறிப்பு வெளியாகியுள்ளது, அது என்னவென்றால் எம்.ஜி.ஆர் நடித்த “நல்ல நேரம்” படத்தில் வரும் பாடலான ஓடி ஓடி உழைக்கனும் என்ற பாடலைத்தான் தற்ப்போது தலைப்பாக மாற்றியுள்ளனர். இந்த திரைப்படத்தை வாசன் விஷ்வல்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. கே.எஸ்.மணிகண்டன் இயக்கவுள்ளார், ஹீரோயினாக அமரிய டாஸ்துர் நடிக்கவுள்ளார் ( இவர் நடிகர் தனுஷுடன் அனேகன் என்ற திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது) , ஜிப்ரான் இப்படத்திற்கு இசை அமைக்கின்றார்.
தலைப்பெல்லாம் நல்லாதான் வச்சிருக்கிங்க எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மனசு கோணாமல் படத்தை பண்ணா சரி.
[youtube-feed feed=1]