பிரபல குணசித்திர நடிகர், மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார்.
பிரபல மலையாள நடிகர் ரவி வல்லத்தோல். லெனின் ராஜேந்திரன் இயக்கத்தில் 1987-ல் வெளியான ஸ்வாதி திருநாள் என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானவர்.
ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் ஒளிபரப்பான முதல் சீரியலிலும் இவர் நடித்திருக்கிறார்.
அமெரிக்கன் ட்ரீம்ஸ் என்ற சீரியலில் சிறப்பாக நடித்ததற்காக, சிறந்த சின்னத்திரை நடிகருக்கான கேரள அரசின் விருதைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கடந்த சில வருடங்களாக, வலுத்தாகாட் பகுதியில் உள்ள வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார்.
நீரிழிவுக்காகவும் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே, மாரடைப்பு காரணமாக இன்று திடீரென மரணமடைந்தார். அவருக்கு வயது 67.