கன்னட திரையுலகின் மிகவும் பிரபலமாக இருந்தவர் ராஜ்குமார். ராஜ்குமாரை சந்தன கடத்தல் வீரப்பன் கடத்தி வைத்திருந்தது அனைவரும் அறிந்ததே.
ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோர் ஏற்கனவே கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது அவருடைய பேத்தியும் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.
ராஜ்குமாரின் மகள் வழி பேத்தியான தன்யா ராம்குமார் ஏற்கனவே கன்னட திரையுலகில் ஒரு சில திரைப்படங்கள் நடித்துள்ளார். தற்போது தன்யா ராம்குமார் தமிழில் அறிமுகமாக இருப்பதாகவும் அவர் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்னட சூப்பர் ஸ்டாரின் பேத்தி தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருப்பதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.