உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்கு பின் இன்று வீடு திரும்பினார்.

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் குன்றியதை அடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ஆஞ்சியோ சோதனை செய்யப்பட்டு சிகிச்சைக்குப் பின் ஐசியூ-வில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்பினார்.