சென்னை:
ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று நடிகர் செந்தில் கூறியுள்ளார்.

சென்னை அடையாரில் டி.டி.வி தினகரனை நடிகர் செந்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ இப்போதுள்ள நிலைமையே நீடித்தால் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரட்டும். அவர் இந்தியர். அ.தி.மு.க.வில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
இல்லை எனில் கட்சி அவ்வளவு தான். எல்லா பதவிகளையும் சிலரே வைத்திருக்கிறார்கள். பதவிகள் பிற எம்.எல்.ஏக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்’’ என்றார்.
[youtube-feed feed=1]