ராஜசேகர் மற்றும் அவரது மனைவி ஜீவிதா ஆகியோருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் மகள்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதனால் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர்.

ஷிவானி, ஷிவாத்மிகா குணமான நிலையில், டாக்டர் ராஜசேகரும் ஜீவிதாவும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

ஜீவிதா குணமானதை அடுத்து வீட்டுக்குத் திரும்பினார். ஆனால் ராஜசேகர் உடல் நிலை பற்றி வதந்தி பரவியது. பின்னர் அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை. நன்றாக இருக்கிறார் என செய்தி மாறி மாறி வந்தது .

இந்நிலையில், சுமார் மூன்று வார சிகிச்சைக்குப் பின் ராஜசேகர் மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதை நடிகை ஜீவிதா தெரிவித்துள்ளார்.