
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய இந்தியாவில் சுமார் 4 லட்சம் நபர்களும், தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் நபர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .
இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த ராகுல் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பிரபலமான நடிகர் ராகுல் வோராவும் கொரோனா தொற்று காரணமாக நேற்று காலை மரணமடைந்தார்.
இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு ராகுல் தனது பேஸ்புக் பக்கத்தில், எனக்கு நல்ல சிகிச்சை கிடைத்திருந்தால் என்னை காப்பாற்றியிருக்க முடியும். நான் மீண்டும் பிறந்து வருவேன் மற்றும் சில நல்ல காரியங்களை செய்வேன். தற்போது எனக்கு நம்பிக்கை எல்லாம் சுத்தமாக போய்விட்டது என்று பதிவிட்டிருந்தார்.
[youtube-feed feed=1]