தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் நிரந்தரமாக நீக்கப்பட்டதையடுத்து சரத்குமார் தன்னுடைய விளக்கத்தை கூறியுள்ளார் தற்போது ராதாரவியும் தனது விளக்கத்தை கூறியுள்ளார் அவர் கூறியதாவது :-
“சரத்குமாரையும், என்னையும் நிரந்தரமாக நீக்கியிருக்கறதா தற்போதைய செயலாளர் விஷால் சொல்லியிருகார். முதலில் நடந்தது பொதுக்குழுவே இல்லேங்கறேன். அது ஒரு விழா அம்புட்டுதான்.
நிதானமா நடத்திய பொதுக்குழு கூட்டத்திலே தவறு பண்ணியிருக்கிறாங்க. 3500 பேருக்கு அழைப்பு விடுத்துவிட்டு, 800 பேர் அமரக்கூடிய அரங்கில் நடத்தறாங்க. இதைக் கேட்டால் நான் லயோலாவில் படிச்சேன் -ங்கறார்.
இந்த முடிவு எங்கள் மீது அவர்கள் கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சியைக் காட்டுது. நடிகர் சங்க அறக்கட்டளைக்கான இடத்தைக் காணலை என்கிறார்கள்,
முதலில் அதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விஷாலை நீக்கியிருக்கிறார்கள். கேள்வி கேட்டால் நீக்குகிறார்கள் என்று சொல்கிறீர்கள். அதே போல நீங்களும் கேள்வி கேட்ட பலரை நீக்கலையா? இந்த நீக்க முடிவை நான் சட்டப்படி சந்திக்கறோம்”
இவ்வாறு ராதாரவி தனது விளக்கத்தை கூறியுள்ளார்..