பெங்களூரு

த்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிடப் போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில காலமாக சமூக நலனில் அக்கறை காட்டி வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் தாம் அரசியலில் இறங்கப் போவதாக தெரிவித்திருந்தார். நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரின் அறிவிப்பை தொடர்ந்து பிரகாஷ் ராஜும் இவ்வாறு அறிவித்தது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலைக்குப் பிறகு பிரகாஷ் ராஜ் தீவிர அரசியல் கருத்துக்கள் தெரிவித்து வந்தார்.

அவர் ஏதாவது அரசியல் கட்சியில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால வர் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் பேசும் போது தமக்கு அரசியல் கட்சிகளில் சேர விருப்பம் இல்லை எனவும் ஆனால் அரசியலில் விருப்பம் இருப்பதையும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரகாஷ் ராஜ் தனது டிவிட்டரில் ”எனது புதிய பயணத்துக்கு ஊக்கமான வரவேற்பு அளித்தமைக்கு நன்ற்ம். நான் மத்திய பெங்களூரு தொகுதியில் வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் சுயெச்சையாக போட்டியிட உள்ளேன். இது குறித்த விவரங்களை நான் இன்னும் சில தினங்களில் மீடியா உடன் பகிந்துக் கொள்கிறேன்”என பதிந்துள்ளார்.

இந்த மத்திய பெங்களூரு தொகுதியில் கடந்த 2014 ஆம் வருடத் தேர்தலில் பாஜகவின் பி சி மோகன் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட காங்கிரஸ் கட்சித் தலைவர் ரிஸ்வானை ஒரு லட்சத்துக்கு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.