எட்டு கிராமங்களைத் தத்தெடுத்த நாட்டாமை நடிகர்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்  நெருங்கிய நண்பர் தெலுங்கு நடிகர், மோகன்பாபு

பொது இடங்களிலும் ‘வாடா ..போடா’’ என்று விளித்துக்கொள்ளும் கொள்ளும் அளவுக்கு ‘குளோஸ் பிரெண்ட்ஸ்’.

அந்த நட்பின் வெளிப்பாடாக , ‘நாட்டாமை’ படம் ‘ தெலுங்கில் ‘பெத்தராயுடு’ என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டபோது- கவுரவ வேடத்தில் ரஜினி நடித்துக்கொடுத்தார்.

அந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார், மோகன்பாபு.

.கொரோனா காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்- சித்தூர் மாவட்டம் சந்திரகிரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 8 கிராமங்களைத் தத்தெடுத்துள்ளார், மோகன்பாபு.

அந்த கிராமங்களைச்  சேர்ந்த மக்களுக்குத் தினமும் ௨ வேளை  பொட்டலம் உணவு அளிக்கும் மோகன்[பாபு, தினந்தோறும் 8 டன் காய்கறிகளையும் ஊர் மக்களுக்கு ‘சப்ளை ‘ செய்ய உள்ளார்.

ஊரடங்கு நீடிக்கும் வரை இந்த உதவி தொடரும் என்று அறிவித்துள்ளார், மோகன்பாபு.

– ஏழுமலை வெங்கடேசன்