நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார் நடிகர் மயில்சாமி .

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். ஜெயலலிதா மரணத்துக்குப் பின் அதிமுகவில் இருந்து விலகிய மயில்சாமி தன்னை எந்த ஒரு கட்சியிலும் இணைத்துக் கொள்ளவில்லை.

இன்று வேட்புமனு தாக்கல் செய்த விருகம்பாக்கம் தொகுதி மக்களுக்கு என்னைத் தெரியும் அதனால் களமிறங்கியிருக்கிறேன். இத்தொகுதி மக்களுக்கு வேலை செய்ய வேண்டும் என்று தான் போட்டியிடுகிறேன். ஒரு கட்சியில் இணைந்து பணியாற்றினால் அந்தக் கட்சியின் மாவட்ட செயலாளருக்கு கட்டுப்பட வேண்டும். யோசித்துப் பார்த்ததில் நான் என்னுடைய தலைவர் எம்.ஜி.ஆரின் கட்டுப்பாட்டில் இருக்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். எனக்கு கம்யூனிஸ்ட் கட்சி பிடிக்கும். என்னுடைய அப்பா அந்தக் கட்சியில் இருந்தார். இப்போது அக்கட்சி வலுவில்லாமல் இருக்கிறது.

ஓட்டுக்கு காசு கொடுப்பதும் வாங்குவதும் தவறு.கமல்ஹாசன் தான் எனக்கு திருமணம் செய்து வைத்தார். அவருடன் நல்ல நட்பு இருக்கிறது. ஆனால் எம்.ஜி.ஆரைத் தவிர யாரையும் நான் தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை. நான் ஓட்டு கேட்பதற்காக எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்தமாட்டேன்.நான் தேர்தலில் போட்டியிட இருப்பதை பல பிரபலங்களிடம் தெரிவித்தேன். ரஜினிகாந்த் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.” என பேட்டி கொடுத்துள்ளார் .

 

[youtube-feed feed=1]