நடிகர் முத்துராமனின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானாலும், தனது நவரச நடிப்பால் விரைவிலேயே உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்த்தை எட்டியவர் நடிகர் கார்த்திக்.
2004-ம் ஆண்டு வரை திரையில் பிஸி நடிகராக இருந்த கார்த்திக் அதன்பின் சரணாலயம் என்ற அமைப்பைத் தொடங்கினார். இதில் உற்சாகமடைந்த கார்த்திக், அரசியலுக்குள் நுழைந்தார்.
2006-ம் ஆண்டு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில செயலாளராக பதவி பெற்ற இவர் , 2009-ல் அக்கட்சியில் இருந்து விலகி, நாடாளும் மக்கள் கட்சியைத் தொடங்கியதுடன் மக்களவைத் தேர்தலில் விருதுநகரில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார்.
தொடர்ந்து, 2018-ல் நாடாளும் மக்கள் கட்சியை கலைத்த கார்த்திக், மனித உரிமைகள் காக்கும் கட்சி என்பதை தொடங்கினார்.
இந்நிலையில் இன்று அவர் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவர்கள் அறிவுரையின்படி சில தினங்களாக ஓய்வில் இருப்பார் என உறவினர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் கார்த்திக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என தெரியவந்துள்ளது.