நடிகர் விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த விஜயகாந்த் இன்று தனது ரசிகர்களையும் தொண்டர்களையும் சந்தித்தது அவர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.

நடிகர் கார்த்தி நேரில் சென்று இவருக்கு வாழ்த்து கூறினார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவிக்க வந்ததாகவும் நடிகர் சங்கம் விஜயகாந்திற்கு கடமைப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

அவரது தைரியமும் அவரை நாடி வரும் அனைவருக்கும் உணவளிக்கும் உள்ளமும் என்னை சிறுவயதில் இருந்து வெகுவாக ஈர்த்தது என்று நடிகர் கார்த்தி தெரிவித்தார்.