ராமேஸ்வரம்:

ன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கி உள்ள கமலஹாசன், அப்துல்கலாம் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார்.

தனது அரசியல் பயணத்தின் முதல்நாளான இன்று அப்துல்கலாமின் சகோதரரை சந்தித்து ஆசி பெற்ற கமல் அதைத்தொடர்ந்து மீனவ பிரதிநிதிகளை சந்தித்து உரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து பேக்கரும்பில் உள்ள கலாமின் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார்.

கலாம் ராமேஸ்வரம் வந்ததை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான கமல் நற்பணி மன்றத்தினர் ராமேஸ் வரத்தில் குழுமியிருந்தனர்.

காலை  ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்திலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள கமலுக்கு அவரது  ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

கலாம் படித்த அரசு பள்ளிக்கு சென்று மாணவர்களிடையே உரையாட நினைத்த கமலுக்கு அரசு எதிர்ப்பு தெரிவித்ததால்,  பள்ளிக்கு வெளியே இருந்து வணக்கம் செலுத்திவிட்டு, மீனவர்களை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து கமல் மதுரைக்கு பயணமாக உள்ளார். இன்று இரவு மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற உள்ள பிரமாண பொதுக்கூட்டத்தில், தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்துகிறார். இந்த கூட்டத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பங்கேற்கிறார்.

மதுரையில் இன்று மாலை நடைபெற உள்ள  பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்காக  பொதுக்கூட்டம் நடக்கும் பகுதி மற்றும் மாநகரின் சில பகுதிகளில், ‘நாளை நமதே’ என்ற பெயரில் கொடிகள் கட்டப்பட்டுள்ளன. தமிழக வரைபடத்தின் மேல் ‘நாளை நமதே’ என அச்சிடப்பட்டுள்ளது.