திருவனந்தபுரம்:

கார் வரி ஏய்ப்பு வழக்கில் மலையாள நடிகர் பகத் பாசில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவி க்கப்பட்டார்.

வரி குறைவு என்பதால் நடிகர், நடிகைகள் பலர் சொகுசு கார்களை போலி முகவரி மூலம் புதுச்சேரி போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. வெளி மாநிலங்களில் கார் பதிவு செய்திருந்தாலும் வாகன சட்டப்படி கேரளாவிலும் பதிவு செய்ய வேண்டும். இதுபோல் நடிகை அமல £பால், நடிகர்கள் பகத் பாசில், சுரேஷ் கோபி ஆகியோர் மீது வரி ஏய்ப்பு செய்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக கேரள அதிகாரிகள் புதுவை போக்குவரத்து அதிகாரிகளிடம் விசாரணை மேற்கெ £ண்டனர். அப்போது மலையாள நடிகர் பகத் பாசில், புதுச்சேரி லாஸ்பேட்டை, புதுப்பேட்டை முகவரியை கொடுத்து காரை பதிவு செய்திருப்பது உறுதியானது.

இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் பகத் பாசில் இன்று திருவனந்தபுரம் குற்ற பிரிவில் ஆஜரானார். அவரிடம் 2 மணி நேரம் விசாரனை நடந்தது. அங்கு அவர் கைது செய்யப்பட்டு, அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கபட்டார். பகத் பாசில் தனது தவறை ஒப்பு கொண்டு, அபராத தொகையை செலுத்திவிடுவத £கவும் தெரிவித்துள்ளார்.

பகத் பாசில் பிரபல இயக்குனர் பாசிலின் மகன். சமீபத்தில் ரிலீசாகியுள்ள வேலைக்காரன் படத்தில் இவர் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.