நடிகர் “சீயான்” விக்ரம் – ஷைலா தம்பதியரின் மகள் அக்ஷிதா. இவருக்கும், கெவின்கேர் குரூப் நிறுவனத்தை சேர்ந்த ரங்கநாதன் மகன் மனு ரஞ்சித்துக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
மனு ரஞ்சித், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் கொள்ளுப்பேரன் ஆவார். இவர்களது திருமணம் கருணாநிதி முன்னிலையில் கோபாலபுரம் இல்லத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், அக்ஷிதாவுக்கு அண்மையில் வளைகாப்பு நிகழ்ச்சி விக்ரம் வீட்டில் எளிய முறையில் நடத்தப்பட்டது.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அக்ஷிதாவுக்கு நேற்று பிற்பகல் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
நம்புவதற்கு கஷ்டம் தான் விக்ரம், “தாத்தா” ஆகி விட்டார்.
– பா. பாரதி