மெகாஸ்டார் சிரஞ்சீவி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

1978ம் ஆண்டு புனதிரள்ளு திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்துவைத்த சிரஞ்சீவி 46 ஆண்டுகளாக தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதுவரை 156 படங்களில் நடித்துள்ள இவர் 537 பாடல்களில் மொத்தம் 24000 நடன அசைவுகள் செய்துள்ளார்.

இந்தியாவில் வேறு எந்தவொரு நடிகரும் இத்தனை நடன அசைவுகளை செய்ததில்லை என்பதால் தனது நடன அசைவுகளுக்காக சிரஞ்சீவி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

இதற்கான சான்றை கின்னஸ் உலக சாதனை புத்தக பிரதிநிதிகள் ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் வழங்கினர். இதில் பாலிவுட் நடிகர் அமீர் கான் கலந்துகொண்டு சிரஞ்சீவிக்கு இந்த விருதை வழங்கினார்.

9 பிலிம் பேர் விருது, 3 நந்தி விருது பெற்றுள்ள சிரஞ்சீவிக்கு 2006ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது, 2024ம் ஆண்டு அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கி மத்திய அரசு கௌரவப்படுத்தியது.