சென்னை: நடிகர் பாக்யராஜின் மாமியாரும், நடிகை பூர்ணிமாவின் தாயுமான சுப்புலட்சுமி (வயது 85) வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர், டைரக்டர், வசன கர்த்தா என பல்வேறு அரிதாரங்களுக்கு சொந்தமானவர் பாக்யராஜ். இவரது மனைவி பூர்ணிமா. இவரது தாயார் சுப்புலட்சுமி, வயது முதிர்வு காரணமாக பல்வறு நோய்களால் அவதிப்பட்டவர், நேற்று இரவு காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அவரது இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது . பூர்ணிமா பாக்கியராஜின் தாயார் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .