சேரன் இயக்கிய வெற்றிக்கொடிக்கட்டு படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் நடிகர் பெஞ்சமின்.
2005-ம் ஆண்டில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்து அசத்தியிருப்பார்.
இந்நிலையில் நடிகர் பெஞ்சமின் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதய கோளாறு ஏற்பட்டதால் சேலம் மருத்துவமனைக்கு விரைந்ததாக கூறப்பட்டது.
மூன்று நாட்கள் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர் அந்த மருத்துவமனையில் மேல் அறுவை சிகிச்சைக்கான வசதிகள் இல்லாததால் பெங்களூரு நாராயணா ஹிருதயாலயா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். இதனிடையே மருத்துவ சிகிச்சைக்காக திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களிடம் உதவி கோரியும் வீடியோ வெளியிட்டுள்ளார்.