சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது,
கேரளாவை சேர்ந்த எலிசபெத் என்ற மருத்துவரை நடிகர் பாலா, ரகசியமாக 2-வது திருமணம் செய்துகொண்டதாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகின.இந்நிலையில், அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடந்துள்ளது.
தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், அஜித்தின் வீரம், கார்த்தியுடன் தம்பி ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் பாலா.
கடந்த 2010-ம் ஆண்டு அம்ருதா சுரேஷ் என்பரை திருமணம் செய்துகொண்ட பாலா, அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 2019-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். இவர்களுக்கு அவந்திகா என்ற மகள் உள்ளார்.