கார் ரேஸிங்கில் களமிறங்கும் நடிகர் அஜித்தின் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணியின் லோகோ வெளியானது.

2023 பொங்கலுக்கு வெளியான துணிவு படத்திற்குப் பின் வேறு எந்த படமும் வெளியாகாததால் சோர்ந்து போயுள்ள அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அஜித்குமார் ரேசிங் அணியின் மூலம் மீண்டும் டிராக்கிற்கு வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய ரேசிங் சீசனுக்காக கடந்த மாதம் துபாயில் பயிற்சியில் ஈடுபட்ட அஜித் தற்போது கார் ரேசிங் உலகில் முன்னணி ஓட்டுநர்களுடன் கைகோர்த்து ஒரு புதிய அணியை உருவாக்கியிருக்கிறார்.

இந்த அணிக்கு அஜித்குமார் ரேசிங் என்று பெயர் வைத்துள்ளதை அடுத்து அதன் லோலோ வெளியிடப்பட்டுள்ளது.

அணியின் உரிமையாளரான அஜித்குமார் அந்த அணியின் முதன்மை ஓட்டுநராகவும் இருப்பார்.

இவருடன் மேலும் மூன்று ஓட்டுனர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த அணியில் மேலாளராக நோயல் தாம்ப்ஸன் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிப்பு மற்றும் கார் ரேஸிங் என இரண்டிலும் ஆர்வம் காட்டி வரும் நடிகர் அஜித்குமார் மீண்டும் கார் ரேஸிங்கில் இறங்கியுள்ள நிலையில் இவரது அடுத்தப்படமான விடாமுயற்சி விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.