aa70114d-3679-43bc-969e-cfc2826b28a6
நடிகர் அஜித் மற்றும் ஷாலினி

கடந்த 5ம் தேதி இரவு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா இயற்கை எய்தினார். இவரின் இறப்பு அனைவரையும் ஆழ்ந்த வருத்ததில் ஆழ்த்தியது. இவரின் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
7fa1b0f6-a2c6-424e-91bb-f303f2460259நடிகர் அஜித் தனது 57வது படத்தின் படபிடிப்புக்காக பல்கேரியாவில் இருந்ததால் 6ஆம் தேதி காலையிலையே தனது இறங்கல் செய்தியை தனது மக்கள் தொடர்பாளர் மூலம் அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பின்பும் ஜெயலலிதாவின் மீது மிகுந்த மரியாதையால் படபிடிப்பிலிருந்து உடனடியாக சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்திலிருந்து நேராக அவரின் மனைவி ஷாலினியுடன் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று அவருக்கு மரியாதை செலுத்தினார் நடிகர் அஜித்.