ரேகான்

ரேகான் பகுதியில் கடும் பனிப்பொழிவில் சிக்கிக் கொண்ட ஆர்வலர்கள் கொரோனா தடுப்பூசி கெட்டுப் போவதற்குள் அதை கார்களில் சென்றோருக்குப் போட்டுள்ளனர்.

கடந்த 1925 ஆம் வருடம் டிப்தீரியா நோய் உலகைக் கடுமையாகத் தாக்கி வந்தது.  அப்போது அலாஸ்கா பகுதியில் உள்ள ஒரு நகரில் பலர் மரணம் அடைந்தனர்.  அங்கு அப்போது கடும் பனி காரணமாகத் தடுப்பூசிகளைக் கொண்டு செல்ல முடியவில்லை.  அதை எடுத்துச் சென்ற மருத்துவ குழுவினர் எஸ்கிமோக்கள் பயன்படுத்தும் நாய்கள் இழுக்கும் ஸ்லெட்ஜ் என்னும் வண்டியின் மூலம் 674 மைல்கள் தூரத்துக்கு எடுத்துச் சென்று ஆயிரக்கணக்கானோரைக் காப்பாற்றினர்.

தற்போது சுமார் 100 வருடங்களுக்குப்  பிறகு ஒரேகான் பகுதியில் இதே நிலை சுகாதார ஆர்வலர்களுக்கு ஏற்பட்டுள்ளது.   ஒரேகான் பகுதியில் 20 பேர் கொண்ட சுகாதாரக் குழுவினர் சுமார் 3 முதல் 4 மணி நேரத்துக்குப் பனிப் பொழிவில் சிக்கிக்கொண்டனர்.  அவர்கள் ஒவ்வொரு இடமாக அளித்து விட்டு இறுதியில் ஆறு மருந்து டோஸ்கள் மட்டுமே பாக்கி இருந்தது.   அந்த கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக் காலக் கெடு நெருங்கிக் கொண்டு இருந்தது.

இந்த மருந்து செல்ல வேண்டிய இடத்துக்குப் பயணம் செல்லும் பாதை பனியால் மூடப்பட்டிருந்தது.  மருந்துகள் கெட்டுப்போவதற்குள் அவை வீணாகாமல் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என குழுவினர் எதிர்பார்த்தனர்.  எனவே வழியில் நின்றிருந்த 40 வாகனங்களிலும் இருந்தவர்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.  பலரும் இதை மறுத்துள்ளனர்.  இது குறித்து  எடுத்துக் கூறி குழுவினர் ஆறு பேருக்கு  தடுப்பூசி போட்டுள்ளனர்.,