சென்னை: தமது விடுதலை தொடர்பாக முதலமைச்சர், ஆளுநர் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆர்டிஐ சட்டத்தின் கீழ் பேரறிவாளன் தகவல்களை கோரியுள்ளார்.
ராஜீவ் படுகொலை வழக்கில் பேரறிவாளனை விடுவிப்பது குறித்து ஜனாதிபதி தான் முடிவு செய்ய வேண்டும் என தமிழக ஆளுநர் கூறி உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் பிராமண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இந் நிலையில் தமிழக முதலமைச்சர், ஆளுநர் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆர்டிஐ மூலம் பேரறிவாளன் தகவல்களை கோரி உள்ளார். அதன்படி விடுதலை தொடர்பான அமைச்சரவை முடிவை வலியுறுத்தி ஜனவரி 29ம் தேதி ஆளுநரிடம் முதலமைச்சர் நேரில் அளித்த கடிதத்தின் நகல், ஆளுநர் பிறப்பித்த உத்தரவின் நகல்களை கேட்டுள்ளார்.
அரசியலமைப்பு 161வது பிரிவின் படி பேரறிவாளனின் மனுவினை மத்திய உள்துறைக்கு அனுப்பி விட்டதாக கூறும் ஆளுநரின் கடிதம் தமிழக அரசால் பெறப்பட்டதா? பெறப்பட்டது என்றால் எந்த தேதியில் பெறப்பட்டது என விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பேரறிவாளன் கேட்டுள்ளார்.
கருணை மன, அமைச்சரவை பரிந்துரை குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆளுநர் ஏதேனும் ஆலோசனை பெற்றாரா? அப்படி பெற்றிருந்தால் ஆளுநரின் கடிதம் மற்றும் அளிக்கப்பட்ட ஆலோசனையில் நகல் ஆகியவற்றின் விவரங்களை தருமாறும் பேரறிவாளன் கோரியுள்ளார்.