சென்னை:
நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சாரங்கபாணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் முழுமையாக பயன்பெறுவதில் கழக முழு ஈடுபாடு கொண்டுள்ளது. எந்த தவறுக்கும் இடம் தராது, முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்றும், அந்த வரிசையில், 313 கண்காணிப்பாளர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கழக அரசு என்றும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel