டில்லி,

டந்த ஏப்ரல் 18ந்தேதி  லண்டனில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா 3 மணி நேரத்திற்குள் பெயில் வாங்கி சிறைக்குள் செல்லாமல்  வெளியே வந்தார்.

தற்போது அவரை விசாரணைக்காக இந்தியா கொண்டுவர இந்திய அரசு முயன்று வருகிறது.

இந்தியாவில் 9000 கோடி கடன் பெற்று ஏமாற்றி விட்டு, இங்கிலாந்தில் தலைமறைவாக வாழ்ந்து வரும் விஜய்மல்லையாவை கைது செய்ய ,ஸ்காட்லாந்து யார்டு போலீசாரின் உதவியை நாடியது இந்திய அரசு.

அதைத்தொடர்ந்த  கைது செய்யப்பட்ட விஜய்மல்லையா 3 மணி நேரத்திற்குள் லண்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார்.

அவரை நாடு கடத்தி, தங்களிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்திடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

‘இதையடுத்து பிரிட்டனில் தங்கியுள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வர சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் லண்டன் சென்றுள்ளனர்.

அவர்கள் விஜய்மல்லாவை விசாரணைக்காக   இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக விரைவில் அவர் இந்தியா அழைத்து வரப்படுவார் என கூறப்படுகிறது.