சென்னை:
யற்கை வளங்களை விலையாகக் கொடுத்துவிட்டு வளர்ச்சியை பெறக் கூடாது என்றும், நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி தெரிவித்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட ஓடையை மீட்கக்கோரி விவசாயி தொடர்ந்த பொது வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.
தருமபுரி மாவட்டம்  சின்னமானசாவடி பகுதியில் இருந்த மழைநீர் வடிகால் ஓடை அந்த பகுதியைச் சேர்ந்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படு வதாகவும், உடனே ஓடையை மீட்டு மழைநீர் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு,  தமிழகத்தில் நீலத்தடி நீர் அதிகளவில் சுரண்டப்படுகிறது. அதுபோல மழைநீர் அதிகளவில் கடலில் வீணாக கலக்கிறது.  இதை தடுக்க,  நீர்நிலை ஆக்ரமிப்பை  அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இயற்கை வளங்களை அழித்துவிட்டு வளர்ச்சியை பெறக் கூடாது என்று தெரிவித்த நீதிபதிக்ள்,  தமிழகத்தில் நீர்வளத்தைக் காக்க ஏன் தனித்துறை அமைக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.   இது குறித்து 4 வாரத்தில் உள்துறை செயலாளர் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்தனர்.