சென்னை:
பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை என்று போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கையில், பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்காமல் இறக்கிவிடும் நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 2019-20ம் ஆண்டில் வழங்கப்பட்ட பஸ் பாஸ் வைத்திருந்தால் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.