மும்பை
போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு பிரபல நடிகை ஜூகி சாவ்லா ஜாமீன் அளித்துள்ளார்.

மும்பையில் இருந்து கோவா சென்றுக் கொண்டிருந்த சொகுசுக் கப்பலில் விருந்தின் போது போதை மருந்து பயன்படுத்தியதாகப் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். அவருடைய ஜாமீன் மனு மீண்டும் மீண்டும் நிராகரிக்கபபட்டதால் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து அவர் ஜாமீன் பெற்றுள்ளார்.

ஆர்யன் கானுக்கு ரூ. 1 லட்சம் மற்றும் ஒரு தனி நபர் உத்தரவாதத்தில் ஜாமீன் அளிக்கப்பட்டது. ஆர்யன் கானுக்கு பிரபல பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லா ஜாமீன் அளித்துள்ளார். இதற்காக அவர் மும்பை நீதிமன்றத்தில் ஆஜரானர். அவரது வழக்கறிஞர் சதீஷ் மான்ஷிண்டே ஜுகி தான் ஆர்யன் கானுக்கு உத்தரவாதம அளிப்பதாக கூறி அவரது ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட்டை அளித்துள்ளார்.

ஜூகி சாவ்லா இதை ஒப்புக் கொண்டு சாட்சிக் கூண்டில் ஏறி சம்மதம் அளித்துள்ளார். ஆர்யன் கானை நடிகை ஜூகிக்கு பிறந்தது முதல் தெரியும் எனவும் ஆர்யன் கானின் தந்தை ஷாருக்கானுடன் அவர் தொழில் முறையில் நன்கு பழகி உள்ளதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தாம் வழக்கறிஞராக இல்லை எனினும் ஜாமீன் அளிக்குமாறு சதீஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்பு பாலிவுட் நடிகை ரியா சக்ரவர்த்தி போதை வழக்கில் இருந்து ஜாமீன் பெற்ற போது அதே வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஒவ்வொருவராக ஜாமீன் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
[youtube-feed feed=1]