கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆச்சாரியா’ .
சிரஞ்சீவின் ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக இருந்தது. அவர் விலகவே, அவருக்குப் பதிலாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக மணிசர்மா, கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
சிரஞ்சீவியின் 65-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆச்சாரியா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிட்டது படக்குழு .
கொரோனா அச்சுறுத்தலால் அரங்கில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், ‘ஆச்சாரியா’ படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்தது. அனைத்து நடிகர்களின் தேதிகளும் கிடைத்துவிட்டதால், நவம்பர் 9-ம் தேதி முதல் ஹைதராபாத்தில் ‘ஆச்சாரியா’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.