பெங்களூரு: பல பெண்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவை சரணடையுமாறு கர்நாடக JD(S) தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி வற்புறுத்தி உள்ளார், கர்நாடக அரசு தனது தொலைபேசியை ஒட்டுக் கேட்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகா மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா மகனான ரேவண்ணா மகன் பிரஜ்வல் ரேவண்ணா, இவர் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் வைத்திருந்ததாக புகார் எழுந்தது, இதுதொடர்பாக கர்நாடக காங்கிரஸ் அரசு வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ய முயற்சித்து வருகிறழ. மேலும், சிறப்பு விசாரணைக்குழு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையறிந்த பிரஜ்வெல் ரேவண்ணா இந்தியாவில் இருந்து வெளியேறி தலைமறைவாக இருந்து வருகிறார். அவர் தற்போது வெளிநாட்டில் உள்ளார். இந்தியா வந்தால் தாம் கைது செய்யப்படுவோம் என வராமல் உள்ளார்.
இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சரும், ஹோலனர்சிபுரா எம்எல்ஏவுமான ஹெச்.டி. ரேவண்ணா, அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான எச்.டி. தேவே கவுடா வீட்டில் கர்நாடக காவல்துறை கைது செய்து. தற்போது அவர் ஜாமினில் வெளியே உள்ளார்.
இந்த நிலையில், ஜேடிஎஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி பெங்களூருவில் செய்தியாளர் சந்திப்பின் போது, ஆபாச வீடியோ விவகாரம் குறித்து நான் பேசவில்லை. இருப்பினும் பிரஜ்வல் ரேவண்ணா விரைவில் இந்தியா வந்து சரணடந்து வழக்கை சந்திப்பது தான் நல்லது. கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு எல்லா சாதனைகளையும் சொல்லிக் கொள்கிறது. இது வெறும் விளம்பர அரசு. அரசின் திட்டங்கள் குறித்து விளம்பரம் வழங்கியதே இந்த அரசின் சாதனை என்றவர், தனது செல்போன்னை இந்த அரசு ஒட்டுக்கேட்டுக்கொண்டிருக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்..