டில்லி,

ராகுல் காந்தி மீது பகிரங்கமாக குற்றம்சாட்டிய டில்லி காங்கிரஸ் மகளிர் அணி தலைவி பர்க்கா சுக்லா சிங் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீது, பெண்கள் இட ஒதுக்கீடு குறித்து, குற்றச்சாட்டுகள் கூறி பரபரப்பை ஏற்படுத்திய டில்லி காங்கிரஸ் மகளிர் அணி தலைவி கட்சியில் இருந்து 6 ஆண்டுகள்  நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

டில்லி மாநில காங்கிரஸ் மகளிர் அணி தலைவியாக இருத்வர் பர்க்கா சுக்லா சிங். இவர்,  டில்லி மாநில காங். தலைவர்  அஜய் மக்கான் மற்றும்   அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி  ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார்.

காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக  கூறுவது,  பெண்களிடம் இருந்து வாக்குகளை பெறுவதற்காகவே என்றும்,  தற்போதைய சூழலில் கட்சிக்குள் எனக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இந்த நிலையர்கள் இவர்கள் எப்படி   பெண்களுக்கு அதிகாரம் அளிப்பார்கள் என்றும் அதிரடியாக கேட்டிருந்தார்  பர்க்கா சுக்லா சிங்.

டில்லியில் பரபரப்பை ஏற்படுத்திய பர்கா சுக்லா சிங் கருத்து குறித்து  நேற்று நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதற்காக பர்க்கா சுக்லா சிங்கை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

டில்லி மாநகராட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் வேளையில், டில்லி காங்கிரசில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.