டில்லி:

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை எதிர்த்து  நாடு முழுவதும் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்,  மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் மக்கள், தாங்கள் பாதுகாப்புக்காக  வைத்திருந்த துப்பாக்கிகளை வரிசையாக வந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வன்கொடுமை சட்ட திருத்த உச்சநீதி மன்ற உத்தரவுக்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருவதை தொடர்ந்து, சீராய்வு செய்யக்கோரி மத்திய அரசு மனு  தாக்கல் செய்துள்ளது.

இதற்கிடையில், உச்சநீதி மன்ற தீர்ப்பு,  எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போக செய்கிறது என்று தலித் அமைப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் இதுகுறித்து தலித் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், வடமாநிலங்களில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் வன்முறையாக மாறியது. இந்நிலையில், மத்திய பிரதேசம் உள்பட வட மாநிலங்களில் மக்களின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கி உரிமத்தை ரத்து செய்து மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன.

இதன் காரணமாக மத்திய பிரதேசம்,  பிந்த் மாவட்டத்தில் உள்ள மெஹ்கோன், கோஹத் மற்றும் மச்சான்ட் பகுதியை சேர்ந்தவர்கள், தங்களிடம் உள்ள  ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.