சென்னை: யுடியூப் சேனலில் ஆபாசமாக பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த யுடியூபர் ‘பப்ஜி’ மதன் தமிழக காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டு உள்ளார்.
தடைசெய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டான பப்ஜி மூலம் பணம் சம்பாதித்தவர் யுடியூபர் மதன். இவர் பப்ஜி எப்படி என்பது குறித்து லைவ் ஸ்ட்ரீமிங் செய்து பணத்தை அள்ளிக் குவித்து வந்ததார். இந்த லைவ் ஸ்ட்ரீமிங்கின் போது சிறுவர், சிறுமிகளை ஆபாசமாக பேசியதாகவும் இன்ஸ்டாகிராமில் மதம் ஆபாசமாக பேசுவதாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை, அவரிடம் விசாரணை நடத்த முயற்சி செய்தது. ஆனால், பப்ஜி மதன் தலைமறைவானார்.
இதையடுத்து, பப்ஜி மதனுக்கு எதிராக ஆதாரங்கள் திரட்டப்பட்டன. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டதுடன், அவரது யுடியூப் சேனலின் அட்மின் அவரது மனைவி கிருத்திகா என்பது தெரிய வந்தது.அதனால்,‘ காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இதற்கிடையில், அவரது ஜாமின் மனுவும் தள்ளி வைக்கப்பட்டதால், அவரை கைது செய்ய காவல்துறை தீவிரமாக தேடி வந்தது.
தலைமறைவான பப்ஜி மதன், போலீசாரால் என்னை கைது செய்ய முடியாது என சவால் விட்டிருந்தார். அதுமட்டுமில்லாமல், போலீசார் தன்னை கண்டுபிடிக்க முடியாத வண்ணம் விபிஎன் என்னும் ஐடியை பயன்படுத்தி வந்தார்.
மதன் தங்கியிருக்கும் இடம் குறித்து அவரது மனைவி கிருத்திகாவிடம் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, மதன் பதுங்கியிருந்த இடம் தெரிய வந்தது. அவர் தருமபுரியில் இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், அங்கு ரகசியமாக விரைந்த போலீசார் தலைமறைவாக இருந்த பப்ஜி மதனை கைது செய்தனர்.