
‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆகியவற்றின் மூலம் அறியப்பட்டவர் அபிராமி.
இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே அதிகாரபூர்வ கணக்கு இருக்கிறது. ட்விட்டர் , டிக் டாக் போன்றவற்றில் அவரின் கணக்கு எதுவுமில்லை . ஆனால் சமீப காலமாக அவரின் பெயரில் போலி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார் அபிராமி.
இது தொடர்பாக அபிராமி “கடைசி முறையாக இதைப் பகிர்கிறேன். ட்விட்டர் போலிக் கணக்குகளைப் போல டிக் டாக்கிலும் போலிக் கணக்குள் பிரச்சினை தருகின்றன. நான் இன்ஸ்டாகிராமில் மட்டும்தான் இருக்கிறேன். நினைவில் கொள்ளுங்கள். ஏனென்றால் இங்கு எனக்கு வெரிஃபைட் கணக்கு இருப்பதால் இங்கு எந்தப் பிரச்சினையும் வராது” என கூறியுள்ளார் .
[youtube-feed feed=1]