பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் ‘ஒத்த செருப்பு’. படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது.
இந்தப் படத்துக்காகப் பல்வேறு விருதுகளையும் வென்றார் பார்த்திபன். இந்தப் படத்தை இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யத் திட்டமிட்டு வருகிறார்.
இந்நிலையில் ‘ஒத்த செருப்பு’ படத்தின் இந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சனை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் பார்த்திபன்.
அதேபோல் ஆங்கிலத்தில் ‘ட்ரூ லைஸ்’ படத்தின் தயாரிப்பாளரிடம் ‘ஒத்த செருப்பு’ ரீமேக் தொடர்பாகப் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.