ஐதராபாத்: மூத்த காங்கிரஸ் தலைவரும், பிரபல வழக்கறிஞருமான, அபிசேக் சிங்வி, காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்துள்ளார். இவர் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து தேர்வு செய்ப்படுகிறது.
மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 இடங்களுக்கு செப்டம்பர் . 3 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்த அந்த இடங்களுக்கான வேட்பமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி, தெலங்கானாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு நேற்று (ஆக. 19) மனு தாக்கல் செய்துள்ளார்.
தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், எம்.பி.க்கள் என தெலங்கானா காங்கிரஸ் பிரிவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வேட்புமனு தாக்கலின்போது உடன் சென்றிருந்தனர். கட்சியின் மாநில பொறுப்பாளர் தீபா தாஸ் முன்ஷியும் கலந்து கொண்டார்.
அபிஷேக் சிங்வி, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து இரு முறையும், (2006-18) மேற்குவங்கத்தில் இருந்து ஒரு முறையும்(2018-24) மாநிலங்களவை உறுப்பினர் ஆகியுள்ளார். தற்போது 4 ஆவது முறையாக அவர் மாநிலங்களவை எம்.பி. யாக உள்ளது குறிப்பிடத்தக்கது.