லக்னோ:

மோடி போல உருவம் கொண்டவர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் ஏப்ரல் 11ந்தேதி முதல் மே 19ந்தேதி வரை 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதன் காரணமாக தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து உள்ளன. ஏற்கனவே முதல்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் 2வது கட்ட தேர்தல் வரும் 18ந்தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் அடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் வேட்பாளர்கள் மனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

லக்னோ தொகுதியில் மே 6ந்தேதி 5வது கட்ட தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இங்கு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

இந்த தொகுதியில், பிரதமர் மோடி போன்று உருவ ஒற்றுமையுள்ள  அபிநந்தன் பதக் ( Abhinandan Pathak) என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவர் நேற்று லக்னோவில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இவர் மோடியை போன்றே இருப்பதால், மோடியின் டம்மி வேட்பாளரா என்று கேள்வி எழுந்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அபிநந்தன் பதக், தான் போலி வேட்பாளர் அல்ல என்று கூறியவர், தான் யாரையும் எதிர்த்தும் போட்டியிடவில்லை, என்று கூறியவர்,  மோடி போட்டியிடும் வாரணாசியிலும் வரும் 26ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய  இருப்பதாகவும் தெரிவித்துள்ளர்.

ஆனால், ஜும்லா வெற்றி பெற்ற பிறகு ராகுல் பிரதமராக ஆதரவு அளிப்பேன் என்று தெரிவித்துள் ளார்.

மோடி போல ஒத்த உருவமுடன் அபிநந்தன் பதக் இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.