ஹரியானா: பால் நின்ற பசுக்களை சாலையில் திரியவிட்டால் ரூ. 5,100 அபராதம்

சண்டிகர்:

பால் நின்ற மாடுகளை சாலைகளில் திரியவிட்டால் 5,100 அபராதம் விதிக்கப்படும் என்று ஹரியானா மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹரியானா பசு பாதுகாப்பு அமைப்பு தலைவர பானி ராம் மங்களா கூறுகையில், ‘‘பசு பாதுகாப்பு ஒரு பிரத்யேக மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பசு கழுத்தில் இருக்கும் நம்பர் அடங்கிய வில்லை மூலம் அது இருக்கும் இடம் இதன் மூலம் அடையாளம் காணப்படும். அரசு நிதியுதவியுடன் கிராமங்களில் பசு பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்படும்.

இந்த மையங்கள கட்டாயம் பதிவு செய்யப்படும். நிர்வாக குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்புடும். ஒரு பசுவுக்கு ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அதோடு 90 சதவீத மானியத்தில் பசு சானம், சிறுநீரில் இருந்து சோப்பு, விளக்கு, தரை துடைப்பு கிருமி நாசினி உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்க கருவிகள் வாங்கி கொடுக்கப்படும். உ.பி.யை தொடர்ந்து இங்குள்ள 8 ஆயுர்வேத கல்லூரிகளுக்கு பசு சிறுநீர் மருந்து தயாரிப்புக்கு கொடுக்கப்படும்’’ என்றார்.

பால் நின்ற பசுக்களை சாலைகளில் திரிய விட்டால் ரூ. 5 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்படும் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உ.பி., மத்திய பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் பசுக்களுக்கு விடுதி, இன்சூரன்ஸ், ஆதார் போன்ற எண் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

Tags: 100 in Haryana, 100 அபராதம், Abandoning cows after they stop giving milk will now cost you Rs 5, ஹரியானா: பால் நின்ற பசுக்களை சாலையில் திரியவிட்டால் ரூ. 5