10 ரூபாய்க்கு ஆவின் பால் பாக்கெட்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை,

மிழகத்தில் 10 ரூபாய்க்கு பால்பாக்கெட்டைஆவின் நிறுவனம் விரைவில்  அறிமுகப்படுத்தும் என்ற தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் இன்று பால்வளத்துறை மானிய கோரிக்கை குறித்த விவாதம் நடை பெற்றது. பின்னர் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது

ஆவினில் ரூ.10க்கு 225 மில்லி லிட்டர் பால்பாக்கெட் அறிமுகம் செய்யப்படும்.  இந்த பால் பாக்கெட்டில் 4.5 சதவீத கொழுப்பு சத்து 8.5 சதவீதம் இதர சத்துகள் இருக்கும் என்று கூறினார்,

மேலும், ரூ.30 லட்சம் செல்வில் தர்மபுரி பால்பண்ணைக்கு புதிய உபகரணங்கள் வாங்கப்படும் என்றும்,சென்னையில் 115 தானியங்கி பால் நிலையங்கள் பாலகங்களாக மாற்றப்படும் என்றும் கூறினார்.

ரூ.37 லட்சம் செலவில் பால் சோதனை உபகரணங்கள் வாங்கப்படும் என்றும் 3000 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிகளில் ஆவின் பாலகம் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


English Summary
Aavin's milk pocket for 10 rupees! Minister Rajendra Balaji